முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-03-20 07:33 GMT

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூரில் 3ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் புவனேஷ் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரையும் நகர கழக செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்துகொண்டு 3000 பேருக்கு புடவை, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள், கால் பந்து, கேரம் போர்ட், சமீபத்தில் இந்தியா கிரிக்கெட் அணிக்கு தேர்வான திருவள்ளூரைச் சார்ந்த மாற்றுத்திறனாளி விக்டர்(எ) வீராவிற்கு மற்றும் இந்தியா பேட்மிட்டன் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் வீராங்கனை மனிஷா ஆகிய இருவருக்கு தலா 10,000 ஆயிரம் ரூபாயை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அப்துல்லா மாலிக், பிரபு கஜேந்திரன், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆதிகேசவன், திராவிட பக்தன், குமரன், உதய மலர் பாண்டியன், ஜெயபாரதி, மிதுன் சக்கரவர்த்தி, ஆதாம், கிஷோர், சுப்பிரமணியம், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் மகாலிங்கம், கூளுர் ராஜேந்திரன், கிறிஸ்டி, ஹரி கிருஷ்ணன், ரமேஷ், மற்றும் திருவள்ளூர் நகர நிர்வாகிகள் கமலக்கண்ணன், ரவி, ராஜேஸ்வரி, பரசுராமன், சம்பத்ராஜ், குப்பன், சீனிவாசன், சிவக்குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் புவனேஷ் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News