அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடுகள் திருடிச் செல்லும் சிசி டிவி காட்சிகள்!
பெரியபாளையம் அருகே மேச்சலுக்கு சென்ற ஆடுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் திருடி செல்லும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
பெரியபாளையம் அருகே மேச்சலுக்கு ஒட்டிச் சென்ற ஆடுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆடுகளை கடத்தி இருசக்கர வாகனத்தில் திருடிச் செல்லும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே 82, பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை ( வயது 68), இவரது மனைவி ஆதிலட்சுமி ( வயது 62) இவர்கள் சொந்தமாக ஆடுகள் வளர்த்து சிறிய அளவில் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆதிலட்சுமி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஆடுகள் மாயமானது இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையில் ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருவர் முகமூடி அணிந்து வந்து இருசக்கர வாகனத்தில் ஆடுகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
அதன் அடிப்படையில் ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சமீப காலமாக சுற்றுவட்டார கிராமங்களிலும் இதே போல் அடிக்கடி ஆடு திருடு போய்விட்டதாகவும், தெரிவித்தனர் எனவே நண்பர்களே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஏழுமலை குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியப வயது 68),