சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு!

புட்லூர் ரயில் நிலையம் பொதுமக்கள் பயணிகள் சென்று வர சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள், பயணிகள் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2024-05-04 03:15 GMT

புட்லூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி மறியலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென்று பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள புட்லூர் ரயில் நிலையம் ஆனது முக்கியம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும் இந்த கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் சிட்கோ நகரில் பணிபுரியும் நபர்களும் இந்த புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் ஆனது முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

இதனால் ரயில் நிலையம் அருகில் இருந்த ரயில்வே கேட் முழுவதுமாக அகற்றப்பட்டது. தொடர்ந்து உயிர் சேதங்களை தவிர்க்க விதமாக ரயில்வே பிரிட்ஜ் வழியாக மக்கள் கடந்து செல்ல ஏதுவாக புதிய பிரிட்ஜ் கட்டப்பட்டு அதன் வழியாக மக்கள் செல்வதற்கான வழி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தாமல் அருகில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்கின்றன இதனால் பல உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன, இதனை தடுக்கும் விதமாக புட்லூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கேட் அகற்றப்பட்ட நிலையில் முழுவதுமாக கற்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டது.


ரயில் பயணிகள் பாதுகாப்பாகச் செல்ல இது ஏதுவாக இருக்கும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ள நிலையில் ரயில் பயணிகளும் கண்டிப்பாக மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் திடீரென சில நபர்களால் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவராக ரயில்வே காவல்துறைக்கும்,

தமிழ்நாடு காவல்துறைக்கும் ரகசிய தகவல் கிடைத்தது, இதனை அடுத்து புட்லூர் ரயில் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News