திருவள்ளூர் அருகே வருமான வரி பிடித்தம் குறித்த கருத்தரங்கம்

திருவள்ளூர் அருகே காக்களூரில் வருமான வரி பிடித்தம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-02-02 07:19 GMT

திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வருமான வரி பிடித்தம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வருமான வரி பிடித்தம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை வருமான வரி ஆணையகம் மற்றும் காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் இணைந்து திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலக வளாகத்தில் காக்களூர் தொழிற்பேட்டை சங்கத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் நலன் கருதி வருமான வரி பிடித்தம் (டி. டி. எஸ்) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மைய மேலாளர் சேகர் தலைமை தாங்கினார். காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், பாஸ்கரன் ஆகியோர் இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதில் வருமானவரித்துறை அதிகாரிகள் டி.வி.ஸ்ரீதர், எல்.ராஜாராமன் ஆகியோர் கலந்து கொண்டு வருமான வரி டி. டி. எஸ்.பிடித்தம் தொடர்பான தகவல்களை பவர்பாயிண்ட் மூலம் விளக்கமாக எடுத்துரைத்தனர். தொழில் நடத்துபவர்கள் செலவு செய்யும் போது சரியான விகிதத்தில் வரிப்பிடித்தம் செய்தல் குறித்த முக்கியத்துவம் குறித்தும், வரிப்பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்த வேண்டிய கட்டாயம் குறித்தும் காலாண்டு டி. டி. எஸ் .படிவங்களை குறித்த காலத்தில் டிரேசஸ் தளத்தில் தாக்கல் செய்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த டி. டி. எஸ் .கருத்தரங்கில் டி. டி. எஸ். காலாண்டு படிவம் தாக்கல் செய்வது குறித்தும், அதில் ஏற்படும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் 70-க்கும் மேலான வரிப்பிடித்தம் செய்யும் தொழில் முனைவோர்கள் பங்கு பெற்று பயன் அடைந்தனர்.

Tags:    

Similar News