ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
திருவள்ளூர் அருகே திருவூர் கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியரை சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே 24 ஆண்டுகள் கழித்து ஆசிரியர்களை மாணவர்கள் சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை கௌரவித்து காலில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாபேட்டை திருவூர் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் கடந்த 1998-2000 ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு மற்றும் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சியானது ஒருங்கிணைப்பாளர்கள் பூபாலன், கண்ணன், வாசுதேவன், ராஜ் மோகன், மணிகண்டன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் படித்த காலகட்டத்தில் பள்ளியில் நடந்த பசுமையான நினைவுகள் குறித்து ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் பேசும் பொழுது உங்களை பார்க்கும் பொழுது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றும்,24 ஆண்டுகள் கழித்து எங்களை அழைத்து கௌரவித்த உங்கள் அனைத்து மாணவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நினைவாக ஏர் கூலர், நினை கேடயங்கள்,சந்தன மாலை,மற்றும் சந்தன மாலை அணிவித்தும் கேக் வெட்டி தங்களுடைய அன்பை மாணவர்கள், ஆசிரியர்கள், இருவரும் பரிமாறிக் கொண்டு பின்னர் ஆசிரியர்களுடன் மாணவர்கள் கலந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.