அனல் மின் நிலையத்தின் மின் சாதன பொருட்களை திருடிய 7 பேர் கைது

வடசென்னை அனல் மின் நிலையத்தின் மின் சாதன பொருட்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-02-02 07:11 GMT

கைது செய்யப்பட்ட 7 பேருடன் போலீசார் உள்ளனர்.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் 3வது நிலையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 2.76கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அருகில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 7பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தின் 3ஆம் நிலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி, டி.வி, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் நிறுவுவதற்காக பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்டு இரண்டு கன்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 14ஆம் தேதி இரண்டு கன்டெய்னர்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு சுமார் 2.98கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி  அனல் மின் நிலைய  17ஆம் தேதி காவலாளி பழனி மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அருகில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிஷ், விக்னேஷ், வாசு, பிரதாப், முத்துப்பாண்டி, அஜித், அருள்பாண்டி ஆகிய 7பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.76கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News