புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை சேத்துப்பாக்கம் தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் கட்டிடம்?

திருவள்ளூர் மாவட்டம் சேத்துப்பாக்கம் ஊஒதொ பள்ளியில் இடிந்துவிழும் நிலையிலுள்ள பள்ளி கட்டிடத்தினை அகற்றிவிட்டு புதிய தார்ஸ் கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-05 02:30 GMT

5௦ ஆண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்ட  இடிந்து விழும் நிலையிலுள்ள ஓட்டுவில்லை கட்டிடம்

damaged school classroom renovation நீட்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே சேத்துப்பாக்கம் ஊராட்சியில் 2000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100.க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

damaged school classroom renovation 

விபத்து ஏற்படும் முன் விழிப்பார்களா அதிகாரிகள்

பள்ளி வளாகதத்தில்  சுமார் 50.ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சீமை ஓடு போட்ட பள்ளி கட்டிடம் ஒன்றுபுதிய கட்டிடம் ஒன்று என இரண்டு கட்டிடங்கள் உள்ளது பழைய கட்டிடத்தில் 1.முதல் 3 வகுப்புகள் வரையிலான மாணவர்கள் படித்து வந்தனர் 4. வகுப்பு மற்றும் 5 வகுப்புகள் புதிய கட்டிடத்தில் நடைபெற்று வந்த நிலையில். பழைய கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மழைக் காலங்களில் மழைநீர் கசிந்தும் ஆபத்தான நிலையில் மாறியது. மேலும் மாணவர்கள் பள்ளியில் படிக்கின்ற போது சில நேரங்களில் ஓடுகள் கீழே விழும் நிலை உருவானது .

இதனால் இந்த கட்டிடத்தை பூட்டிவிட்டு எதிரே உள்ள புதிய கட்டிடத்தில் தற்போது பள்ளி இயங்கி வருகிறது 100 மாணவர்கள் படிப்பதற்கு போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மிகவும் சிரமம் படுகின்றனர். எனவே இந்தப் பழைய பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News