கும்மிடிப்பூண்டி அருகே துலுக்காத்தம்மன் ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை

கும்மிடிப்பூண்டி அருகே துலுக்காத்தம்மன் ஆலயத்தில் நடந்த பௌர்ணமி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-07 07:12 GMT
கும்மிடிப்பூண்டி அருகே தடா கிராமத்தில் துலுக்காத்தம்மன் ஆலயத்தில் பெளர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அருகே தடா கிராமத்தில் துலுக்காத்தம்மன் ஆலயத்தில் நடைபெற்ற  பௌர்ணமி சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர மாநிலம் தடா கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ துலுக்காத்தம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அம்மனை வேண்டினால் குழந்தை பாக்கியம், திருமண தடை, தீராத நோய்கள் தீர்க்கும் என்பது  பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர், கூடூர், சூளூர்பேட்டை, திருப்பதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மட்டுமல்லாமல் தமிழகத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். தைப்பூசம் பௌர்ணமியை முன்னிட்டு உலக மக்களின் நலனை வேண்டி சிறப்பு பூஜைகள் ஆலய நிர்வாகி நளினி மாயா ராஜகோபால் சாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர்,பன்னீர், மஞ்சள், 108 குங்கும அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து திரு ஆபரணங்கள் மற்றும்  வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீப தூப ஆராதனைகள் அம்மனுக்கு காண்பிக்கப்பட்டது.

மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள் தேவராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவில் ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்த்திக் ராஜ், கார்த்திக், குமரன், தேவதாஸ்,ரகு,காமராஜ், காணி முத்து, நாகராஜ், நந்தகுமார், அருள், சுரேஷ், கீதா, வெண்மதி, சாந்தி, ஏழுமலை ரவி ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கு வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நளினிமாயா  செய்திருந்தார்.

Tags:    

Similar News