திருப்பத்தூர் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: கிராமிய போலீஸார் நடவடிக்கை

திருப்பத்தூர் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா ஏற்றிவந்த மினி லாரி  பறிமுதல். திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை.;

Update: 2021-08-05 17:28 GMT

திருப்பத்தூர் அருகே தடைசெய்யப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா  பறிமுதல் கிராமிய காவல்துறையினர் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம்  திம்மணாமுத்தூர் ஊராட்சி குருவப்பள்ளி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக  திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ஆய்வாளர் சிரஞ்சீவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர், போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குருவப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பருக் பாஷா (வயது 35) என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து குட்கா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News