திருச்சியின் புதிய கலெக்டராக திவ்யதர்ஷினி பதவியேற்பு
திருச்சி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நேற்று திவ்யதர்ஷினி பதவி ஏற்றுக் கொண்டார்.;
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தேர்தல் தொடர்பில்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினி திருச்சி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினி திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.