தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது.;
தேசம், தெய்வீகம் எனது இரண்டு கண்கள் என முழங்கியவர் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். நாட்டின் விடுதலைக்காக போராடிய அவரை பிரிட்டீஷ் அரசு சிறையில் அடைத்த போது கூட சிறைச்சாலையில் இருந்தபடியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி நாடாளுமன்றத்தில் முழங்கியவர் முத்துராமலிங்க தேவர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 146வது பிறந்த நாள் குருபூஜை விழா இன்று பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேவருக்கு மரியாதை செய்தார். மேலும் மதுரை கோரிமேட்டில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதே போல் தமிழகம் முழுவதும் இன்று தேவர் சிலை உள்ள இடங்களில் எல்லாம் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயம் க.ஸ்ரீதர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், பொருளாளர் சேவியர்,மீனவர் அணி கண்ணதாசன், அறிவழகன் விஜய், பேரவை ஐயம்பாளையம் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ்,அறிவழகன், ஒன்றிய செயலாளர் எஸ் பி முத்துக் கருப்பன், வண்ணாங் கோவில் முத்துக்குமார்,சமயபுரம் ராமு, திருநாவுக்கரசு, வக்கீல் வெங்கடேசன், தேவா, புங்கனூர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.