வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள்: மேயர் அன்பழகன் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகளை மேயர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

Update: 2024-10-16 16:30 GMT

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பார்வையிட்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 1 மற்றும் மூன்றாவது மண்டலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதை மேயர் மு. அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1 மற்றும் 3 மண்டலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜின்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை மேயர் மு. அன்பழகன் ,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், மற்றும் மாமன்ற உறுபினர்கள், அலுவலர்களுடன் பார்வையிட்டார்கள். மழை அதிக அளவு பெய்தால் மழை நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக மேயர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் உதவி ஆணையர்கள் சரவணன் ,ஜெயபாரதி , உதவி செயற்பொறியாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News