திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி

திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.;

Update: 2024-10-22 15:45 GMT

பட்டம்மாள் உருவ படத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா முத்தரசன் மரியாதை செய்தார்.

திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி
  • whatsapp icon

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் மீது பிரிட்டிஷ் அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். ஆயுத போராட்டம் நடத்தாமல் வீட்டில்  இருந்தவர்கள் மீது கூட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சதி தி்ட்டம் தீட்டியதாக வழக்குகள் பதிவு செய்து கொடுமைப்படுத்தினார்கள்.

இந்த வழக்கிற்கு பெயர் சதி வழக்கு. திருச்சி சதிவழக்கில் சிக்கியவர்  தியாகி கருப்பண்ணன். கருப்பண்ணனின் மனைவி க.பட்டம்மாள் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் 23வதுவார்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வருகைதந்து பட்டம்மாள் திருவுருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதோடு தூய்மைபணியாளர்களுக்கு தீபாவளிபண்டிகை புத்தாடை, இனிப்புகள் வழங்கினார்.மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்,மாவட்ட செயலாளர் சிவா உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

இந்நிகழ்விற்கு வந்த இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக கூட்டணியில் இருந்து கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால் அது நடக்காது. அதிமுக எரிந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த அவர் முயற்சிக்கவேண்டும். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்றார்.

Tags:    

Similar News