திருச்சி விவசாயிகள் கண்களை கருப்பு துணியால் கட்டி 18-வது நாள் போராட்டம்
திருச்சி விவசாயிகள் 18 வது நாளான இன்று கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.;
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்தர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் கரூர் பைபாஸ் மலர் சாலையில் நடந்து வருகிறது.
தினமும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்18 -வது நாளான இன்று கண்களில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.