மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சி மேயரிடம் மனு

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2022-07-27 10:39 GMT

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மனு அளிக்கப்பட்டது.

இன்று 27.07.2022ந் தேதி மக்களை தேடி மாநகராட்சி என்ற குறைதீர்க்கும் முகாம் திருச்சி மாநகராட்சி சார்பில்  ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் மேயர் அன்பழகனை  மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி  தெற்கு மாவட்டம் சார்பில்  செயலாளர் கிஷோர் குமார் சந்தித்து  ஒரு மனு கொடுத்தார்.

அதில் திருவானைக்காவல் சூரிய தெப்பகுள நீர் வழித் தட ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், சிட்டு குருவி போல் மனித இனத்தை அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மக்கள் நீதிமய்யம் கட்சியின்  தகவல் தொழில்நுட்ப ணி மாவட்ட அமைப்பாளர் நாகவேல், மாவட்ட பொருளாளர் கருப்பையா, வழக்கறிஞர் விஜயநாகராஜன், நற்பணி இயக்க முன்னாள் அமைப்பாளர்கே.ஜே.எஸ்.குமார், ஒன்றிய செயலாளர்கள் கணேஷ், சுப்பராயன், சசிகுமார், வட்ட செயலாளர் ஆட்டோ பாஸ்கர், இளைஞரணி கார்த்திக்கேயன், மாதவன் மற்றும் மய்ய தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News