Do you know where the Trichy East Taluk office will function from now on?-திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் இனி எங்கே செயல்படும் என தெரியுமா?

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் இனி கொட்டப்பட்டில் திறக்கப்பட்ட இடத்தில் செயல்பட தொடங்கும்.;

Update: 2022-12-20 14:30 GMT

திருச்சி கொட்டப்பட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று(20.12.2022) திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(20.12.2022) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர;ந்து திருச்சி கொட்டப்பட்டில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் குத்துவிளக்கேற்றி வைத்து அலுவலகத்தினை பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் ரூ. 259.66, இலட்சம் செலவில் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட ஆணை வெளியிடப்பட்டு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், இவ்வலுவலகம் கட்ட கொட்டப்பட்டில் 2.20 ஏக்கரில் (8914 சதுர மீட்டர்) நிலம் ஒதுக்கப்பட்டது. இவ்வாணைக்கிணங்க தமிழ்நாடு பொதுப்பணித்துறை தலைமைக் கட்டடக் கலைஞர்களால் உரிய வரைப்படம் தயாரிக்கப்பட்டு அதன்படி விரிவான மதிப்பீடு ரூ. 259.66 இலட்சத்திற்கு தயாரிக்கப்பட்டு 01.12.2020 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இக்கட்டிடத்தின் தரைத்தளம் 590.00 சதுர மீட்டர் மற்றும் முதல் தளம் 590.00 சதுர மீட்டர் போர்ட்டிகோ 72 சதுர மீட்டர் என மொத்தம் 1252 சதுர மீட்டர் (13472 சதுர அடி) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தின் பதிவு அறை கோட்டா கற்களாலும், அலுவலர்கள் அறைகள் பளிங்கு கற்களாலும், கழிவறையின் தரைகள் வழுக்காத பளிங்கு கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கட்டிடத்திற்கு அனுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.

தரைத்தளத்தில் 3 வட்டாட்சியர் அறை, அலுவலகம் அறை, கணினி அறை, உணவக அறை, ஆவண பதிவு அறை, அலுவலர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறைகளும்,

முதல் தளத்தில் - வட்டாட்சியர் அறை மற்றும் அலுவலகம், கூட்ட அரங்கம், தேர்தல் அலுவலர் அறை மற்றும் பதிவறை, நிலஅளவை அலுவலகம் மற்றும் பதிவறை, அலுவலர்கள், மற்றும் பொதுமக்களுக்கு தனித்தனி கழிவறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அணுகுசாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் குடிநீர் வசதி செய்யப்பட்டு ரூபாய்.259.66 இலட்சத்தில் பணிகள் முடிக்கப்பட்டு இன்று(20.12.2022) தமிழ்நாடு முதலமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கபட்டது.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் கலைச்செல்வி உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அதாவது தாலுகா அலுவலகம் இதுவரை டவுண்ஹால் போலீஸ் நிலையம் அருகில் ராணி மங்கம்மாள் காலத்து மிக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இனி இந்த அலுவலகம் புதிதாக  கொட்டப்பட்டில் புதிதாக இன்று திறக்கப்பட்ட அலுவலகத்தில் செயல்பட தொடங்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News