தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.;

Update: 2022-04-05 04:12 GMT

திருச்சியில் நடந்த தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் சங்கர் பேசினார்.

தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ம.அய்யப்பன், பொது செயலாளர் வழக்கறிஞர் கோ.சங்கர் ஆகியோர் தலைமையில் பொருளாளர் என்ஜினீயர் சமயபுரம் ந.கோபிநாத் முன்னிலையில்  திருச்சி தில்லை நகர் ரங்கா ஹாலில் நடைப்பெற்றது . ஏப்ரல் 16 சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழாவை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் திருச்சியில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதில் மாநகர பொறுப்பாளர் அ.அசோக், மண்ணச்சநல்லூர் தொகுதி செயலாளர் மாஸ்டர் ராஜா , லால்குடி தொகுதி செயலாளர் வெள்ளனூர் முருகானந்தம், திருவெறும்பூர் தொகுதி செயலாளர் கே.கோபி, ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் புலிவலம் பாவேந்தர் , லால்குடி ஒன்றிய செயலாளர்கள் சிலம்பரசன், செந்தில்,மண்ணை நவநீதன் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் விஜயராஜ் , மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சண்முகம், திருச்சி மாநகர் மிதுன்சக்கரவர்த்தி, பிரதாப், வடவூர் தியாகு, ரமணி, பாலு,  தென்னூர் லெனின் சந்திரசேகர், கோபி, லால்குடி வினோத்,  புலிவலம் விவேக் ஆகிய நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News