கொட்டப்பட்டு குளம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்திய கவுன்சிலர் ஜாபர்

கொட்டப்பட்டு குளம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார் 61வது வார்டு கவுன்சிலர் ஜாபர்அலி.;

Update: 2022-03-28 15:44 GMT

மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலி

திருச்சி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சியின் 65 வார்டு உறுப்பினர்களும் பேசினார்கள். முதல் கூட்டம் என்பதால் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ஐந்து நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி பல உறுப்பினர்கள் 20 நிமிடம் வரை பேசினார்கள்.

61 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலி தனது வார்டில் உள்ள பல பிரச்சனைகளை வரிசையாக எடுத்து வைத்து பேசினார். தனது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு குளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஜே.கே.நகர் விரிவாக்க பகுதிக்குள் புகுந்ததால் அந்த பகுதியில் வசித்த மக்கள் இரண்டு மாத காலம் வெளியில் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அது போன்ற ஒரு சூழல் மீண்டும் ஏற்படக் கூடாது என வலியுறுத்தினார்.

மேலும் கொட்டப்பட்டு குளத்து நீரை வெள்ள காலங்களில் வெளியேற்றுவதற்கான மூன்று குழுமிகள் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. அவற்றை கண்டுபிடித்து வெள்ள நீர் வடிந்து செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தனது வார்டுக்குட்பட்ட காந்திநகர், சந்தோஷ் நகர், ஆர்.வி.எஸ். நகர், ஆர்.எஸ். புரம் ஆல்பா பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திலகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருப்பதால் அதனை தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News