மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் கோவணத்துடன் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் கோவணம் மட்டுமே அணிந்து போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-11-04 12:29 GMT

திருச்சியில் விவசாயிகள் கோவணம் அணிந்து போராட்டம் நடத்தினர்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்தர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 12ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தினமும் வெவ்வேறு விதமாக நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின்  போராட்டம் தீபாவளி திருநாளான இன்றும் தொடர்ந்தது. போராட்டத்தின்  இருபத்திநான்காவது நாளான  இன்று விவசாயிகள் மேலாடை எதுவும் அணியாமல்  கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து உண்ணாவிரதமும் இருந்தனர்.

Tags:    

Similar News