தூத்துக்குடி கடலில் மூழ்கி சங்குக்குளி மீனவர் பலி :- சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி கடலில் மூழ்கி சங்குக்குளி மீனவர் இறந்தார். தகவல் அறிந்த சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2021-06-17 18:15 GMT
தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த சங்குக்குளி மீனவர் குடும்பத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் (33), சங்கு குளிக்கும் தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த சக மீனவ தொழிலாளர்கள் 8 பேருடன் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சங்குக்குளிக்க சென்றுள்ளார்.

கடற்கரையில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலையில் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, அமிர்தராஜ்க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சக மீனவ தொழிலாளர்கள் அவருக்கு படகில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர்

மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமிர்தராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மரைன் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடடத்தி வருகிறார். உயிரிழந்த அமிர்தராஜூக்கு ஜெனிட்டா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த தகவல் அறிந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பலியான மீனவரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக சார்பில் அந்த குடும்பத்தாருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். 

இந்த குடும்பத்துக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும் என அந்த குடும்பத்தாரிடம் அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News