வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு கனிமொழி எம்.பி. இசைக்கருவிகள் வாங்கி கொடுத்துள்ளார்.;

Update: 2024-01-12 15:20 GMT

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு கனிமொழி எம்பி இசைக்கருவிகள் வழங்கினார்.

இசைக்கருவிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட தகவலறிந்தவுடன் புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்து உள்ளார் கனிமொழி எம்.பி.

பரியேறும் பெருமாள் படத்தில் 'எங்கும் புகழ்' பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன். கடந்த டிசம்பர் மாதம் 16 மற்றும் 17ந்தேதிகளில்  தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பேய் மழையினால் அவர்களது இசைக்கருவிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த தகவலை அறிந்தவுடன் புதிய இசைக்கருவிகள் வழங்கப்படும் என  கனிமொழி எம்.பி உறுதி அளித்து இருந்தார்.

அதனை தொடந்து இன்று (12/01/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இசைக்கலைஞர்களுக்கு புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்தார். இதில், ஒரு நாதஸ்வரம், இரண்டு தவில், ஒரு உருமி, ஒரு பம்பை மேளம் ஆகியவை அடங்கும்.

தூத்துக்குடி தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில்  உடனிருந்தனர்.

பரியேறும் பெருமாள் படத்தில் 'எங்கும் புகழ்' பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரது வீடு கனமழையால் சேதமாகி அங்கிருந்த நாதஸ்வரம், தவில், உருமி, பம்பை மேளம் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையறிந்த கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இழப்புகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்குப் புதிதாக இசைக்கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களிடம் சில தினங்களுக்கு முன்பு உறுதி அளித்தார்.உறுதி அளித்திருந்த படி இன்று இசைக்கருவிகளை அவர்களுக்கு நேரில் வந்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News