வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2024-01-07 16:21 GMT

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் இயக்குனர் டாக்டர் எஸ். ஜே. கென்னடி நிவாரண உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

கனமழையினால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதியில் அதிகமான வெள்ளநீர் தெருக்களிலும், வீடுகளிலும், பஜார் கடை முழுவதும் வெள்ளம் புகுந்தது. அனைத்து உடைமைகளையும் வெள்ளநீர் அடித்து சென்றது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் அடைந்து பொருட்சேதங்கள் ஏற்பட்டதால் மக்கள் உண்ண உணவின்றி கஷ்டப்பட்டு வரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் மழையினால் வந்த வெள்ள நீர் இன்னும் வெளியேறாமல் உள்ளது.

இதனால் இப்போது மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதை அறிந்து இப்பகுதி மக்களுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் அசோக் லேலண்ட் எம்ப்ளாஸ் யூனியன் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சோட்டையன் தோப்பு பகுதியில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ். பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத்தலைவர் ஏ.பொ. சுதாகர் முன்னிலை வகித்தார் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கி தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 1000 மதிப்புள்ள போர்வை, துண்டு, அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் மற்றும் பிஸ்கட்டுகள் அடங்கிய உணவு பொட்டலங்களை வழங்கினார். மேலும் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை மதர் சமூக சேவை இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப் பணியில் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தன்னார்வ கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News