தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட 238 பகுதிகள் :-ஆட்சியர் தகவல்

மாவட்டத்தில் கொரோனா 238 பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-29 16:42 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 29 ஆம் தேதியான இன்று 691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 46,486 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 704 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 38,394 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 7845 கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் இன்று 7 பேர் உயிரிழப்பு, இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 238 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி ஊரகம் 12, வல்லநாடு 2, ஸ்ரீவைகுண்டம் 5, ஆழ்வார்திருநகரி 11, உடன்குடி 16, சாத்தான்குளம் 7, தூத்துக்குடி மாநகராட்சி 51, கோவில்பட்டி 64, ஓட்டப்பிடாரம் 23, கயத்தார் 21, விளாத்திகுளம் 18 என மொத்தம் 238 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இப்பகுதியில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News