துாத்துக்குடியில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம்-ஆணையாளர் அறிவிப்பு.

தூத்துக்குடி பகுதியில் நாளை சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆணையாளர் சரண்யா “அறி” தகவல்.

Update: 2021-05-23 17:42 GMT

துாத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா “அறி”

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளை (24.05.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் காலையில் வார்டு 11 - கிருஷ்ணராஜபுரம், வார்டு 10 - சுந்தரவேல்புரம், வார்டு 50 - பெரியசாமி நகர், வார்டு 50 - எம்.ஜி.ஆர்.நகர், வார்டு 35 - சின்னமணிநகர், வார்டு 45 - தாமோதரநகர் ஆகிய பகுதிகளிலும், மாலையில் வார்டு 17 - புனித மரியன்னை காலனி (அம்மா உணவகம் எதிரில்), வார்டு 50 - ராஜபாண்டிநகர், வார்டு 42 - சிதம்பரநகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ஆணையாளர் சரண்யா அறி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News