தூத்துக்குடி-நடமாடும் காய்கறி விற்பனை வாகனம்-அமைச்சர் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை அமைச்சர் பி. கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

Update: 2021-05-24 06:16 GMT

துாத்துக்குடியில் காய்கறி வாகனத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கிவைத்தார்..

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லாத ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படக் கூடாது என்ற வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் வாகனங்கள் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய முதற்கட்டமாக 76 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் பொருட்கள் விற்பனை செய்யும் சேவையை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகன அனுமதி தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது கண்காணிக்கப்படும் என கூறிய அவர் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏதும் இருந்தால் அவர்களுக்கு உதவிடும் வகையில் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தொடர்ந்து இறைச்சி விநியோகமும் வாகனங்கள் மூலமாக விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யாஅறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ரவீசந்திரன், துணை பதிவாளர் ரவீந்திரன், உதவி ஆணையர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், ராமசந்திரன், மார்க்கெட் மேலாளர் நியூட்டன், உதவி மேலாளர் ரவி, மாநகர நகர் நல அலுவலர் வித்யா, சேகர், ராஜசேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News