போனஸ் கேட்டு அனல்மின் நிலையம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அனல் மின்நிலையம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-22 00:30 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், தூத்துக்குடி அனல் மின்நிலையம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 20 சதவீத போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,  கிளை திட்டத் தலைவர் சந்திரன் தாங்கினார். இதில் மதிமுக நகர செயலாளர் முருகபூபதி, MLF மாநில பொருளாளர் அனல்செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதிமுக மீனவர் அணி செயலாளர் நக்கீரன், MLF மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாநில பொறுப்பாளர் நெல்லை அக்னி ராஜ், கிளைச் செயலாளர் எபனேசர் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில்,  அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி கருணை தொகையை வாரியமே வழங்கிடவும், ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் குறித்து நடப்பு கூட்டத்தொடரில் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட ஆணை உத்தரவை அமல்படுத்த கோரியும், மின் வாரிய பணியாளர்கள் உச்ச வரம்பின்றி 20 சதவீத போனஸ் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.ஒப்பந்த தொழிலாளி மாரிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News