கொலை வழக்கில் ஈடுபட்ட தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம்..!

ரவுடி ஜெயசீலன் கொலை வழக்கில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் தற்காலிக பணி நீக்கம் : எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு.

Update: 2021-05-12 15:53 GMT

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் லூர்து ஜெயசீலன் கொலை வழக்கில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பொன்மாரியப்பனை தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (41) என்பவரை கடந்த 09.05.2021 அன்று இரவு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் பொன் மாரியப்பன் என்பவர் தன்னுடைய தாய் மாமா அழகு என்பவரை மேற்படி கொலையுண்ட லூர்து ஜெயசீலன் 1998ம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதனை மனதில் வஞ்சம் வைத்து லூர்து ஜெயசீலனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் 23 ஆண்டுகள் கழித்து மேற்படி தலைமைக் காவலர் மற்றொரு எதிரியான மோகன்ராஜ் என்பவருடன் கூட்டு சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேற்படி வழக்கில் இந்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து மேற்படி தலைமைக் காவலர் பொன் மாரியப்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டார்.

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தபோதிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நேர்மையான முறையில் தலைமைக் காவலரை கைது செய்து, தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News