கொரோனா நிதியை கையாளுவது குறித்து-துாத்துக்குடியில் மிஸ்ரா தகவல்.

ரேஷன் கடை மூலம் 80 முதல் 85 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-20 18:51 GMT

தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா இன்று ஆய்வு செய்தார். வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் உள்ள கொரோனா வகைப்படுத்து மையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் மற்றும் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் தற்போது கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து செல்கின்றனர். ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்படுகிறது மேலும் கொரோனா நிவாரண நிதியை கையாளுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்ற அவர் இதுவரை ரேஷன் கடை மூலம் 80 முதல் 85 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் பேரிடர் கால நிவாரண நிதியிலிருந்து 50% தொற்று நோய் நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற அவர்,கொரோனா நிவாரண நிதியை கையாளுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News