சேலம் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம்
Salem News today: மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுத்தலைவர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் லைமையில் நடைபெற்றது.
Salem News today: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் குழுத்தலைவர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழுத் தலைவர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, முறையாக நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட 37 திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு. அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இக்குழுவானது அனைத்து திட்டப்பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்து, திட்ட செயல்பாடுகளின் இடர்பாடுகளை களைய ஒருங்கிணைந்த வழிகளை அறிந்து மாவட்ட திட்டக்குழுவின் முன்னுரிமை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, முன்னுரிமை பணிகளுக்கு இடம் மற்றும் நில வசதிகள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு ஒன்றிய, மாநில அரசால் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டு செயல்படுகிறது.
அவற்றில் குறிப்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பாரத பிரதமர் ஆதர்ஸ் கிராம யோஜனா, தீன் தயாள் அந்தோதயா யோஜனா, சமூக பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்டம், சீர்மிகு நகர திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதான் மந்திரி கௌரவ நிதித் திட்டம். ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசுகையில், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் இலக்குகளையும் துறைத்தலைவர்கள் மேலும் விரைவாக மேற்கொள்ள இந்தாய்வுக் கூட்டம் உறுதுனையாக உள்ளது.
மேலும், அனைத்துத்துறை அலுவவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு திட்டங்களின் பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவத்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் சேலம் மேற்கு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இராஅருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஆ.தேவிகா சின்னுபிள்ளை, எஸ்.திருநாவுக்கரசு, மணி, பரிமளா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.