கலைஞர் மகளிர் உதவித்தொகை வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை

முற்றுகையிட்ட பெண்களிடம் அறந்தாங்கி தாலுகா தாசில்தார் ஜபருல்லா பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது பெண்கள் வாக்குவாதம் செய்தனர்

Update: 2023-11-07 06:45 GMT

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தும் இதனால் வரை கிடைக்கவில்லை என கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தும் இதனால் வரை கிடைக்கவில்லை என கூறி ஏகணிவயல் ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவி அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து விட்டு ஆனால் ஒரு சில நிபந்தனைகளை அறிவித்து அந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் ஆயிரம் வழங்கப் படும் என தெரிவித்ததால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் குடும்ப பெண்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா ஏகணி வயல் ஊராட்சியில் 600-க்கும் மேற்பட்ட குடும்ப கார்டுகள் உள்ள நிலையில் இதில் 250 க்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பித்து இதனால் வரை எந்த பணமும் கணக்கில் ஏறவில்லை.

இது தொடர்பாக  அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு பதிலும் முறையாக அளிக்கப்படவில்லை என்று கூறி ஏகணிவயல் ஊராட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் முற்றுகையிட்ட பெண்களிடம் அறந்தாங்கி தாலுகா தாசில்தார் ஜபருல்லா பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து குடும்பத் தலைவிகள் ராஜேஸ்வரி ,செல்ல மேரி ஆகியோர் கூறுகையில், குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து விண்ணப்பம் வழங்கப்பட்ட இந்த நாள் வரை எந்த பணமும் வரவு வைக்கப்படவில்லை.

இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் முறையிட்டும் முறையாக பதில் அளிக்கப்படவில்லை என்றும் ஆகையால் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட தந்ததாகவும் மேலும் பணம் எங்களுக்கு ஏறாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News