தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Women can apply for the job of PROTECTION OFFICER

Update: 2022-06-15 06:00 GMT

 புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு வரும் 23.06.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு (PROTECTION OFFICER) மாதம் ஒன்றுக்கு ரூ.30,000- தொகுப்பூதியத்தில் பணிபுரிய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கு கல்வித் தகுதிகளான, முதுகலை சமூகவியல்- முதுகலை உளவியல் ஃ முதுகலை சமூகப் பணி மற்றும் சமூக பணியில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 22, அதிகபட்ச வயது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் 35, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32, பொதுப் பிரிவினர் 30. தொகுப்பூதியம் ரூ.30,000- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்) ஆகும்.

அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுயசான்றொப்பமிட்டு சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையுடன் 23.06.2022 மாலை 5.00 மணிக்;குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலக தொலைபேசி எண் 04322 - 222270 மூலம் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவிதா ராமு தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News