நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டம்: ஆட்சியர் தகவல்

ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தை நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்

Update: 2022-05-19 04:15 GMT

புதுக்கோட்டை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் வாணிபக்கழக அரிசி அரவை முகவர்கள் மற்றும் தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டைநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் வாணிபக்கழக கிடங்குகளில் கண்டுமுதல் அரிசியினை ஒப்படைப்பு வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேரம்-பகுதி நேரம் ) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர் பொருள் வாணியக் கழகம், மண்டல மேலாளர், புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News