புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்

Kalnadai Valarpu -ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 260 சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Update: 2022-11-08 06:00 GMT

பைல் படம்

Kalnadai Valarpu -கால்நடையானது நிலமற்ற ஏழை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆகியோருக்கு வருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு சூழ்நிலையை உருவாக்கவும் குறிப்பாக சுயதொழில் மூலம் எண்ணற்ற கிராமப்புற மற்றும் நகர்புற மக்களில் பெரும்பாலான மகளிர் கால்நடை பராமரிப்பில் ஈடுபடவும் வழிவகுத்துள்ளது. புரதம் மிகுந்த ஊட்ட சத்து உணவான பால், முட்டை, இறைச்சி ஆகியவை கால்நடை மூலம் பெறுகிறோம். ஒரு வட்டார மக்களின் சமூக கலாச்சார பின்னணியை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

கால்நடைதுறை, மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றை கண்காணிக்கிறது. இதைத் தவிர சமூகத்தில் பின் தங்கியுள்ள ஏழை, ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதார உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் வெவ்வேறான திட்டங்களை நடைமுறைபடுத்துகிறது. மாநிலத்தில் பரவியுள்ள வெவ்வேறான கால்நடை துறைகள் மேற்கண்ட பணிகளை செய்கின்றன. துறையின் தொடர் நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி திட்டங்களை நடைமுறை படுத்துவதுடன் நாட்டின் பொருளாதார சமச்சீர் நிலையை கால்நடை மற்றும் இயற்கைவளம் பேணிக்காக்கிறது

புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 'சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்" நடத்திடும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடப்பாண்டிற்கு தமிழக அரசு சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்" நடத்தப்படவுள்ளது. இதன்படி, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 260 சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்" சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

இந்த சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, CLP அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்கள் பதில் அளிப்பார்கள். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. எனவே, அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News