முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

புதுக்கோட்டை நகரில் ஆயிரக்கணக்கிலான பொதுபந்தல்களிலும் தங்களது வீட்டு வாசல்களில் பந்தல்கள் அமைத்து அன்னதான் வழங்கினர்

Update: 2023-03-16 07:30 GMT

புதுக்கோட்டையில்  நடந்த அன்னதான நிகழ்ச்சியை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழாவில்,  அன்னதானம் மற்றும் பானகம், நீர் மோர், பழங்களை  சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை,  திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா பூச்சொரிதல்,  பால்குடம், வழிபாடுகள்,  தேரோட்டம் என விழா களைகட்டியதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.   சமூக ஆர்வலர்கள் வர்த்தக நிறுவனங்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசுப்பணியாளர், அரசியல்வாதிகள், ரோட்டரி அமைப்பினர்கள் உள்ளிட்டோர் திருவப்பூர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை நகரில் ஆயிரக்கணக்கிலான  பந்தல்கள் அமைத்தும் தங்களது வீடுகளின் வாசல்களிலும் பந்தல்கள் அமைத்து  அன்னதானம் மற்றும் பானகம், நீர் மோர், பழங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் திருக்கோகர்ணம் இல்லத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், கல்வியாளர்கள் கவிஞர்தங்கம்மூர்த்தி,    அபிராமி கருப்பையா,  மகாத்மாரவிச்சந்திரன் , முரளி மற்றும் எஸ் முத்துசாமி, எஸ்விஎஸ்,  ஜெயக்குமார்,  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள்,  கட்சி நிர்வாகிகள் வடக்கு மாவட்ட திமுக   செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன்,  நகர செயலாளர் செந்தில், நைனாமுகமது, சந்திரசேக,ர் நகராட்சி உறுப்பினர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

அன்னதானம் வழங்குவது பற்றி சுந்தரம் சிவனடியார் கூறுகையில், .அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும். அன்னதானம், சொர்ண தானம், வஸ்திரதானம், கோதானம், பூ தானம், கண் தானம் என்று தானங்கள் பல வகைப்படும். இவற்றையெல்லாம் விட ஒரு மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய தானம், ‘நிதானம்.’ அந்த நிதானம் நம்மோடு இருந்தால் நிம்மதி கிடைக்கும். ‘பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். எனவே எதையும் நிதானமாகச் செய்ய வேண்டும். தானங்களில் பிறர் பசியைப் போக்கும் அன்னதானம் முதன்மை பெறுகிறது. அன்னதானம் என்பது பிறர் பசியைப் போக்குவது. பாத யாத்திரை வருபவர்களுக்கு, ஸ்தல யாத்திரை வருபவர் களுக்கு, கிரிவலம் வருபவர்களுக்கு எல்லாம், நடந்துவரும் களைப்பைப் போக்க பல இடங்களில் பலரும் உணவளிக்கின்றனர். அதன் மூலம் அவர்களது ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது .

அன்புடனும், கருணையுடனும் மனிதாபிமான அடிப் படையிலும் செய்யும் அன்னதானங்கள், நம்முடைய அடுத்த பிறவி வரை பலன் கொடுக்கும். மீனுக்கு பொரி போடுவதும், யானைக்கு கரும்பு கொடுப்பதும், பசுவிற்கு கீரை, பழம், வைக்கோல், பருத்திக் கொட்டை கொடுப்பதும் கூட ஒரு வகையில் அன்னதானம் தான். அன்னதானம் செய்பவர்களின் வாழ்க்கையில் பசிப்பிணி வராது. அவர் களின் சந்ததிகளும் தழைத்தோங்க வழிகிடைக்கும். அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும் என்றார் அவர்     

Tags:    

Similar News