புதுக்கோட்டையில் இன்று பள்ளிகள் திறப்பு: இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.

Update: 2022-02-01 06:06 GMT

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்குவத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது அடுத்து தமிழக அரசு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என உத்தரவு அளிக்கப்பட்டதை அடுத்து இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1967 அனைத்து வகை பள்ளிகளும் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டது.

இதனையடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பள்ளி திறக்கப்பட்டதையடுத்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு மலர் கொடுத்தும் கிருமிநாசினி மற்றும் முக கவசம் ஆகியவை கொடுத்து மாணவிகளை வரவேற்றனர்.

மேலும் மாணவிகள் அவரவர் கொண்டுவந்துள்ள குடிநீர் மற்றும் உணவுகளை மற்றவர்களுக்கு பரிமாற வேண்டாம் என்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் இருந்தால் தெரிவிக்க வேண்டுமென அறிவுரை வழங்கி மாணவர்களை உள்ளே அனுப்பி வைத்தனர்.

மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் வீட்டிலிருந்து படிப்பதைவிட பள்ளிக்கு வந்து படிப்பது தான் மிகவும் பிடித்ததாகவும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News