எய்டு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை: சின்னதுரை எம்எல்ஏ வழங்கல்

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எய்டு இந்திய நிறுவனம் தொடர்ந்து உதவித் தொகைகளை வழங்கி வருகிறது

Update: 2023-12-24 12:30 GMT

 ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

புதுக்கோட்டையில் எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கியது, வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுத்தது, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கியது உள்ளிட்ட ஏராமான பணிகளை எய்டு இந்திய நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்து வருகிறது.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பல்வேறுஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எய்டு இந்திய நிறுவனம் தொடர்ந்து உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. அதனொரு பகுதியாக இன்றைய தினம் மூன்று மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 85 ஆயிரம் மதிப்பில் காசோலைகளை வழங்கியுள்ளது பாராட்டுக்குறியது என்றார் எம்எல்ஏ சின்னத்துரை.

முன்னதாக எய்டு இந்திய நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் கவிஞர் எஸ்.கவிவர்மன், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிரு~;ணன், இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News