புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள்

புதுக்கோட்டையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

Update: 2021-07-18 11:28 GMT

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொரோனா  வைரஸ் தொற்றால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் இன்று அக்கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. அதன்பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்களுக்கு காய்கறி அரிசி மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News