உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு

Uthamar Gandhi Award-புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்க இவ்விருது வழங்கப்படுகிறது

Update: 2022-12-22 15:15 GMT

பைல் படம்

Uthamar Gandhi Award-உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறி முறைகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வெளியிட்டுள்ளார்.

கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக் கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும் புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அரசாணை (நிலை) எண்.111, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி2) துறை, நாள்:05.09.2006-இன்படி உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டு 2006-07 முதல் 2009-10-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் வருடத்திற்கு 15 விருதுகள் வீதம் 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கான வெகுமதியுடன் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது

இந்த விருது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்  இவ்வாண்டு முதல் மீண்டும் உத்தமர் காந்தி விருது  மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3.80 கோடி ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த  நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடையும் கிராம ஊராட்சிகளை ஊக்கப் படுத்தும் வகையில் http:/tnrd.tn.gov.in/ என்கிற அரசின் இணையளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையில் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10.11.2022 அன்று பத்திரிக்கை செய்தி வெளியிடப் பட்டுள்ளது. மேலும், தற்போது பின்வருமாறு புதிய வழிகாட்டு நெறி முறைகள் பெறப்பட்டதை பொதுமக்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் அறியும் வகையில் வெளியிடப்படுகிறது.

இணையதளத்தின் சுட்டி மூலம் http:/tnrd.tn.gov.in/ என்கிற முகவரியை தேர்வு செய்யவும். மேற்படி இணையதளத்தினுள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள் நுழையவும். மேற்படி பயனரின் முகவரியில் அறிக்கை எண்.12-ஐ சுட்டவும். அதன் அடிப்படையில், அரசாணையில் உள்ள அனைத்து தேர்வு காரணிகளும் அடங்கிய உள்ளீடு செய்திடும் படிவம் இருக்கும். அப்படிவத்தினை முறையே பதிவு செய்து "Save" பொத்தானை அழுத்தி சேமிக்க வேண்டும் எனவும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News