காணொலி காட்சி மூலம் புதுக்கோட்டை கலெக்டருக்கு ஆலோசனை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை கலெக்டரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கொரோனா தடுப்பு முழு ஊரட்ங்கு குறித்து ஆலோசனை வழங்கினார்.

Update: 2021-05-23 08:30 GMT

காணொலி காட்சி மூலம் புதுக்கோட்டை கலெக்டரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

கெரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மிக அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் தளர்வில முழு ஊரடங்கு நாளை முதல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார் அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார்

 இதில் முழு ஊரடங்கு  முறையாக கடைபிடிக்க வேண்டும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பொதுமக்கள் யாரும் வெளியே வராதபடி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும் .

நோய்த் தொற்றைக் குறைக்க அனைத்து துறைகளும் ஒன்றுசேர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டுவர வேண்டும் . தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கினார்

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், வருவாய் அலுவலர் சரவணன், மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்

Tags:    

Similar News