புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி : தொண்டு நிறுவனம் வழங்கல்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியினை பெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் எம்எல்ஏ முத்துராஜா வழங்கினார்.

Update: 2021-05-29 17:45 GMT

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை பெஸ்ட் தொண்டு நிறுவனம், அறம் ஆஸ்திரேலியா அமைப்பு ஆகியவை இணைந்து வழங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தலைமை வகித்து ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதியிடம் ஒப்படைத்தார்.

இதில் பெஸ்ட் நிறுவன இயக்குநர் அதியமான்¸ மேலாளர் கண்ணன் மற்றும் ரமேஷ்¸ சக்திவேல்¸ முத்துக்குமார்¸ வீரையா இப்ராகிம்ஷா ஆகியோர் கலந்துக் கெண்டனர்.

Tags:    

Similar News