பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள்: புதுக்கோட்டையில் கபாடி போட்டி

முதல்நாளில் 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விறுவிறுப்பாக ஆர்வத்துடன் விளையாடினர்

Update: 2022-09-18 17:30 GMT

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற கபாடி போட்டிகளை தொடக்கி வைத்த பாஜக நிர்வாகிகள்

புதுக்கோட்டை திலகர் திடலில் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் மோடி லீக் கபாடி போட்டி நேற்று நள்ளிரவு இரவு 12 மணிக்கு தொடங்கியது.‌

முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பாஜகவினர் கபாடி போட்டி நடைபெறும் வளாகத்தில் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி தொடங்கிய கபாடி போட்டியானது சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் 85 கிலோ எடையுடைய கபாடி வீரர்கள் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட அணியினர் பதிவு செய்துள்ள நிலையில், முதல்நாளில் 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விறுவிறுப்பாக ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.‌இந்த மோடி லீக் கபாடி போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சத்து 72 ரூபாயும்‌ இரண்டாவது பரிசாக 5072 ரூபாயும் மூன்றாவது மற்றும் நான்காவது பரிசாக 2572 ரூபாயும்  பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக் காண போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.‌ விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த மோடி கபாடி லீக் போட்டியை ஏராளமானோர் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News