பட்டிமன்ற மாதிரி வடிவில் மாற்றுத்திறனாளிகள் நூதனப் போராட்டம்

பட்டிமன்ற வடிவ மாதிரியை முன்வைத்து நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடத்தினர்

Update: 2022-12-01 14:30 GMT

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில்  பட்டிமன்ற வடிவ மாதிரி வடிவில்  நூதனப் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை பட்டிமன்ற வடிவில் முன் வைத்து நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே திங்கள் கிழமை நடத்தினர்.

ஓன்றிய அரசு மாற்றுத் திறனாளிகளின் புதிய உரிமைச் சட்டம் 2016-ஐ செயல்படுத்தாததைக் கண்டித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, மாதாந்திர உதவித் தொகையில் ஒன்றிய அரசின் பங்கை உயர்த்த மறுப்பதைக் கண்டித்து, நூறுநாள் வேலைத் திட்டத்தில் நிதியை சரிபாதியாக குறைத்ததைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளக்கான நலச் சங்கத்தின் சார்பில் இந்த நூதனப் பேராட்டம் நடைபெற்றது. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்பவர்கள் ஒரு அணியாகவும், அதை மறுப்பவர் ஒரு அணியாகவும் பட்டிமன்ற வடிவில் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.

இதற்கு நடுவராக சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவாளன் செயல்பட்டார். வழக்கை தொடுக்கும் அணியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ், ஆர்.நிரஞ்சனா, எஸ்.மகாலெட்சுமி ஆகியோரும், மறுக்கும் அணியில் ஜி.கிரிஜா, எம்.சி.லோகநாதன், எஸ்.பாட்சாபாய் ஆகியோரும் பேசினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கவேல், துணைத் தலைவர் கே.சண்முகம், பொருளாளர் ஜி.சரவணன் உள்ளிட்டோர் பேசினர். ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News