பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம்: புதுகை எம்எல்ஏ தொடக்கம்

Cycle Race Game - புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்

Update: 2022-09-10 05:30 GMT

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயத்தினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Cycle Race Game -பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயத்தினை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகிலிருந்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா இன்று (10.09.2022) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News