கல்வி விடுதிகளில் பகுதிநேர தூய்மை பணியாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்

Update: 2022-05-11 06:00 GMT

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தகவல் தெரிவித்துள்ளார் .

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் (தொகுப்பூதியம்) (மாதம் ரூ.3000ஃ-) இனச் சுழற்சி அடிப்படையில் ஆண் பணியாளர் காலிப்பணியிடங்கள் 12, முன்னுரிமை பொதுப்பிரிவு 01 (முதல்பட்டதாரி), ஆதிதிராவிடர் 01 (தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற நபர்கள்), பழங்குடியினர் 01 (கொரோனா தொற்றினாலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்), முன்னுரிமை இல்லாதது பொதுப்பிரிவு 01 (மாற்றுத்திறனாளி காதுகேளாதோர்), பொதுப்பிரிவு 01, பிற்படுத்தப்பட்டோர் 03 (முஸ்லீம் அல்லாதோர்), பிற்படுத்தப்பட்டோர் 01, அருந்ததியினர் 01, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 02 மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் பெண் பணியாளர் காலிப்பணியிடங்கள் 03, முன்னுரிமை பொதுப்பிரிவு 01 (கொரோனா தொற்றினாலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்தோர்) முன்னுரிமை இல்லாதது, பிற்படுத்தப்பட்டோர் 01, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 01 ஆகும்.

மேற்கண்ட பகுதிநேர தூய்மைப் பணியாளர் (ஆண்-பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், வயது வரம்பு 1.7.2022 தேதியில் SC/ST- 18 முதல் 37, BC,BCM,MBC&DNC - 18 முதல் 34, இதர பிரிவினர் 18 முதல் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப் பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு www.pudukkottai.nic.in என்ற இணைய தளத்தை காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News