வடசேரிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

வடசேரிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2022-04-18 07:42 GMT

வடசேரிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அருகே வடசேரிபட்டியில் 520 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டு தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடசேரி பட்டியில் உள்ள அப்பகுதி பொதுமக்கள் அந்த இடத்தில் தங்களுக்கு தேவையான பள்ளிக்கூடம் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும் அடுக்குமாடி குடியிருப்பு தங்களுக்குத் தேவையில்லை என அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை நிறுத்த கோரியும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை கட்டி கொடுக்க வேண்டும் எனக்கூறி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனை அடுத்து தற்போது கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அரசு சார்பில் கட்டப்படும் அரசு குடியிருப்பில் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

Tags:    

Similar News