கோயில் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்

சிறப்பான முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

Update: 2022-08-02 14:30 GMT

தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் நடைபெற்ற தேர்திருவிழாவில் எதிர்பாராதவிதமாக  நேரிட்ட தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில், 31.07.2022 அன்று நடைபெற்ற தேர்திருவிழாவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தேர் விபத்தில் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (02.08.2022) நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். 

பின்னர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில், 31.07.2022 அன்று நடைபெற்ற தேர் விபத்தில் காயமடைந்த 8 நபர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைத்து நபர்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்காணும் விபத்து தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 நிதியும், ஆறுதலும் தெரிவித்திருந்தார்கள். அதன்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  நேற்றைய தினம் அனைத்;து நபர்களையும் நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.50,000 க்கான காசோலைகளையும் வழங்கினார்.

அதன்படி, இன்றையதினம் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையிட்டு, அனைத்து நபர்களுக்கும் ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டு,  சிறப்பான முறையில் சிகிச்சை அளித்திடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News