வாக்கு எண்ணும் மையத்தில் இணைய வசதியை, மே 1ம் தேதிதான் கொடுக்க வேண்டும்

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு இணைய வசதியை, வாக்கு எண்ணும் முதல்நாள்தான் வழங்க வேண்டும் என கேட்டு திமுக, அதன் கூட்டணி வேட்பாளர்கள், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கலெக்டர் உமாமகேஷ்வரியிடம் மனு அளித்தனர்.

Update: 2021-04-21 12:45 GMT

புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் வருகிற 22-ஆம் தேதி இணையதள வசதி பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

இந்த இணையதள வசதிகள் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படும் வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட இருக்கிற இணையதள வசதி மற்றும் சிஸ்டம் வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள் பொருத்துவது பொருத்தமாக இருக்கும்.

அந்தந்த மையங்களில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அத்தாட்சி பெற்ற நபர்கள் தான் அந்த பணிகளில் ஈடுபட வேண்டும் அடையாள அட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக வழங்கிட வேண்டும்,

வேட்பாளர்களின் அதிகாரம் பெற்ற முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்படி இணையதள வசதி பொருத்தும் பணிகளைப் பார்வையிட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்,

வேட்பாளர்களின் முகவர்கள் முகக்கவசம் கையுறை சனிடைசர் போன்ற கோவிட் தடுப்பு உபகரணங்கள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் மேஜைகளில் எண்ணிக்கை 10 ஆக குறைக்க படுவதால் நள்ளிரவு வரை வாக்கு எண்ணும் பணி நீடிக்கும் நிலை உருவாகும் எனவே அதை தவிர்ப்பதற்காக வாக்கு என்னும் மேஜை 10 என்பதை அதிகரித்து 16 மேஜைகள் குறையாமல் வைக்க வேண்டும்.

உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து தர புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிதிமுக வேட்பாளர்கள், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் செல்லபாண்டியன் மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் மெய்யநாதன் சின்னத்துரை உள்ளிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News