மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் அவதி

Update: 2021-11-20 08:09 GMT

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் மழைநீரில் அமர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்

புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று பெய்த மழையால் 2 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருப்பதால் மின்வாரிய ஊழியர்கள் மட்டும் அல்லாது மின் கட்டணம் கட்ட வரும் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்து வருகிறது குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தினந்தோறும் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் மாவட்டத்தில் முழுவதும் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது மேலும் உபரி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது

இந்த உபரி நீர் குடியிருப்பு பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் சூழ்ந்துள்ளது. அவ்வப்போது நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அதனை வெளியேற்றி விடுகின்றனர்

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது குறிப்பாக புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது அதனுடன் கழிவு நீரும் சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது

மேலும் தண்ணீர் வடியாமல் இன்னும் இருப்பதால் இரண்டு அடி ஆழத்திற்கு மழைநீர் மற்றும் கழிவு நீருடன் தேங்கி நிற்பதால் மின்வாரிய ஊழியர்கள் மட்டும் அல்லாது மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு உள்ளனர்.

 பொதுமக்கள் தண்ணீரில் சென்று மின் கட்டணம் செலுத்துவதற்காக அமர்ந்துள்ளனர். ஆனால் 10 மணி வரை மின் கட்டணம் செலுத்தும் கவுண்டர் திறக்கப்படாததால் அப்பகுதியில் வீசி வரும் துர்நாற்றத்துடன் மழை நீரிலேயே பொதுமக்கள் அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News