தங்கமா..தண்ணீரா.. புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன பிரசாரம்

தங்கம் ஆடம்பரம் தண்ணீர் அவசியம் Savewater என்ற விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் தண்ணீர் பாட்டிலை பொதுமக்களுக்கு வழங்கினர்

Update: 2022-05-03 14:00 GMT

புதுக்கோட்டையில் நூதன பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்

புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தங்கம் ஆடம்பரம் தண்ணீர் அவசியம்  Savewater என்ற விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் தண்ணீர் பாட்டிலை பொதுமக்களுக்கு வழங்கி இன்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்

கடந்த பல ஆண்டுகளாக புதுக்கோட்டையில் நிலவிவரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டுடன். இன்றைய அட்சய திருதியை நாளில் தங்கம் ஆடம்பரம், தண்ணீர் அவசியம், உணவிற்கு குடிக்க தண்ணீர் இல்லை .ஆகையால் தங்கம் சேமிப்பதை விட தண்ணீர் சேமிப்பதே மேலானது என்று துண்டறிக்கையுடன் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு  பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

இதில், மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நகர தலைவர் ராஜா இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் நகர பொருளாளர் சிராஜ்தீன் பிரபா அசார் சாகுல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News