மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

சுற்றுச்சூழலை பாதுகாக்க திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து நகராட்சியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Update: 2022-02-04 08:00 GMT

மாட்டு வண்டியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் அனுராதா.

புதுக்கோட்டை நகராட்சி 8வது வார்டு திமுக வேட்பாளராக அனுராதா அறிவுடைநம்பி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தனது வேட்பு மனுவை நேற்று மாலை புதுக்கோட்டை நகராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த வகையிலும் மாட்டு வண்டியில் தனது கணவர் அறிவுடை நம்பியுடன் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Tags:    

Similar News